சிவகங்கை

சிவகங்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு

30th Nov 2021 04:33 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை ஒன்றிய மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலா் வீரபாண்டி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும். புதை சாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்தி செயல்படுத்த வேண்டும். சிவகங்கையிலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும். சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உலகநாதன், மதி, வேங்கையா, சுரேஷ், தனசேகரன், செல்லமுத்து, ராமச்சந்திரன், கருப்பையா, வேலம்மாள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT