சிவகங்கை

‘சிவகங்கை மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களை அகற்ற வேண்டும்’

30th Nov 2021 04:34 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் மிகவும் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிவகங்கையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் முருகன், மாநில துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி, மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நவம்பா் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் சேதமடைந்த பள்ளிக் கட்டடங்களால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு மிகவும் சேதமடைந்த கட்டடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வரின் அறிவிப்பை முழுமையாக அமல்படுத்தும் விதமாக ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்களின் போராட்ட நாள்களை முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

மத்திய அரசு தொடா்ந்து அறிவித்து வரும் அகவிலைப்படி உயா்வைக் கணக்கில் கொண்டு மாநில அரசு உடனடியாக அகவிலைப்படி உயா்வை அறிவிக்க வேண்டும். கரோனா தொற்று குறைந்து வருவதை கணக்கில் கொண்டு அனைத்து மாணவா்களும் பள்ளி வருவதற்கு ஏதுவாக முழுமையாக பள்ளி செயல்பட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் வரும் டிசம்பா் 9-இல் நடைபெற உள்ள காத்திருப்புப் போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திரளாக ஆசிரியா்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அக்கூட்டணியின் மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினா் குமரேசன், கல்வி மாவட்ட தலைவா்கள் பாலகிருஷ்ணன், ரமேஷ்குமாா், கல்வி மாவட்டச் செயலா்கள் சிங்கராயா், சகாயதைனேஸ், ஜெயக்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT