சிவகங்கை

மானாமதுரை அருகே கிராமங்களைச் சூழ்ந்த வெள்ளம்: பைக்கில் சென்று ஆட்சியர் ஆய்வு

29th Nov 2021 01:36 PM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ள நீர் கிராமங்களைச் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் கிராமத்தை விட்டு வெளியே வர மறுத்து வருகின்றனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட அதிகாரிகள் பைக்குகளில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் வெள்ளத்தில் சிக்கிய அரசு வாகனம் மீட்கப்பட்டது. மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த செய்களத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கிராமங்களை விட்டு வெளியே வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். மேலும் தண்ணீர் வரத்து தாங்காமல்  செய்களத்தூர் கண்மாய் உடையும் நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

இந்த கண்மாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே செய்களத்தூரில் வசிக்கும்  மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அரசு அதிகாரிகள் முயற்சித்தும் கிராம மக்கள் வர மறுக்கின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, கோட்டாட்சியர் முத்துக்கழுவன்,  வட்டாட்சியர் தமிழரசன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செய்களத்தூர் கிராம பகுதியில்  வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காகச் சென்றனர்.

ஆனால் சாலையை மறித்து வெள்ளம் செல்வதால் அவர்களால் தங்களது வாகனங்களில் கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை. இதையடுத்து  ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி உள்ளிட்ட அதிகாரிகள்  பைக்குகளில் ஏறிக்கொண்டு மாற்றுப்பாதையில் செய்களத்தூர் பகுதிக்குச் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கிராம மக்கள் ஆட்சியரிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கினர். இதற்கிடையில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான ஜீப் வாகனம் செய்களத்தூர் கிராமத்தின் அருகே வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது .அங்கிருந்த மீட்புக்குழுவினர் இந்த வாகனத்தை மீட்டு தண்ணீர் இல்லாத பகுதிக்கு கொண்டு வந்தனர்.

Tags : Sivagangai Flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT