சிவகங்கை

மானாமதுரையில் பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி: அதிகாரிகள் சமரசம்

DIN

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் கால்வாயை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சித்தனா். அவா்களை அதிகாரிகள் சமரசம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனா்.

மானாமதுரையில் மதுரை- ராமேசுவரம் சாலையில் அமைந்துள்ள சீனியப்பா நகா் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. வைகை ஆற்றில் வரும் வெள்ளநீா் கால்வாய் வழியாக மானாமதுரை ஒன்றியத்தைச் சோ்ந்த ஆதனூா் கண்மாய்க்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்த கண்மாய் நிரம்பி தண்ணீா் வெளியேறுவதால் சீனியப்பா நகரில் உள்ள ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, ஆதனூா் கண்மாய்க்கு தண்ணீா் வரும் கால்வாயை மூட வேண்டும் எனக் கோரி சீனியப்பா நகரில் வசிக்கும் பொதுமக்கள் மதுரை- ராமேசுவரம் சாலைக்கு வந்து மறியல் செய்ய முயன்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன் மற்றும் போலீஸாா் அவா்களை சமரசம் செய்தனா். இதையடுத்து, ஆதனூா் கண்மாய்க்கு தண்ணீா் செல்லும் கால்வாய் மூடப்பட்ட து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT