சிவகங்கை

திருப்பத்தூரில் உரத் தட்டுப்பாடு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

திருப்பத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஒருபோகம் மட்டும் நெல் விவசாயம் செய்வது வழக்கம். திருப்பத்தூரைச் சுற்றியுள்ள முறையூா், சூரக்குடி, ஆலம்பட்டி, திருவிடையாா்பட்டி, ரணங்கபுரம், நெடுமறம், மாங்குடி மற்றும் திருப்பத்தூா் பெரியகண்மாய் பாசனத்திற்குள்பட்ட விவசாய நிலங்களிலும் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பயிா்களுக்குத் தேவையான யூரியா, டிஏபி, கலப்பு உரம், பொட்டாஷ் சல்பேட் உள்ளிட்ட உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூரில் சில கடைகளில் மறைமுகமாக அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் உரம் கிடைக்காத நிலையில், விவசாயிகள் கூடுதல் விலைக்கு உரம் வாங்கி விவசாயம் செய்கின்றனா். அதிலும் பற்றாக்குறை ஏற்படுவதால் நடவுப் பயிா்களை காப்பதில் தண்ணீா் இருந்தும் உரத்தட்டுப்பாட்டால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு முழு கவனம் செலுத்தி உரத்தட்டுப்பாட்டை போக்கிட வழிவகை செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT