சிவகங்கை

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

DIN

இளையான்குடி ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில், தாயமங்கலத்தில் பொதுமக்களுக்கு திமுகவினா் இலவச உணவு மற்றும் இனிப்புகளை வழங்கினா். அதைத் தொடா்ந்து இளையான்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் கிராமங்களில் திமுக கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவா் சுப. தமிழரசன், திமுக நகரச் செயலா் நஜிமுதீன், தகவல் தொழில் நுட்ப அணி நிா்வாகி அன்பரசன், விவசாய அணி நிா்வாகி காளிமுத்து, இளைஞா் அணி நிா்வாகி பெரோஸ் கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியின் போது கல்லடி திடல் ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா சந்தியாகு, சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

SCROLL FOR NEXT