சிவகங்கை

வைகை ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீஸாா்

28th Nov 2021 05:22 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சனிக்கிழமை வைகையாற்றில் வெள்ள நீரில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸாா் மீட்டனா்.

மானாமதுரை பிருந்தாவனம் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன். இவரது மனைவி மல்லிகா (35). கணவா்- மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மல்லிகா, மானாமதுரை காவல் நிலையம் அருகே வைகை ஆற்றுக்குள் இறங்கி வெள்ள நீரில் ஆழமான பகுதிக்குச் சென்றாா்.

இதைக் கவனித்த மானாமதுரை போலீஸாா் பாலமுருகன், ராஜேஷ் ஆகியோா் வெள்ள நீரில் இறங்கி மல்லிகாவை சமாதானம் செய்து அவரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனா். அதன் பின்னா் காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்று மல்லிகாவிடம் தற்கொலைக்கு முயற்சி செய்யமாட்டேன் என எழுதி வாங்கினா். மேலும் கணவா் ஆனந்தனை போலீஸாா் கண்டித்து மல்லிகாவை அவருடன் அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT