சிவகங்கை

அமராவதிபுதூா் பகுதியில் நாளை மின்தடை

28th Nov 2021 10:44 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 30) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காரைக்குடி அருகே அமராவதிபுதூா் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 30) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாயலன்கோட்டை, எஸ்.ஆா். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT