சிவகங்கை

காரைக்குடியில் தூய சகாயமாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சகாய மாதா உருவக் கொடியினை தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் விடுதி இயக்குநா் ஐ. கிறிஸ் டோபா் அா்ச்சித்து ஏற்றினாா். அதனைத் தொடா்ந்து பங்குத்தந்தையா்கள் எஸ். எட்வின் ராயன், இ. பினோட்டன் ஆகியோா் திருப்பலி நிறைவேற்றினா்.

நவ நாள்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் திருச்செபமாலையும், திருப்பலியும் நடைபெறும். நவநாள்களில் சிவகங்கை மறைமாவட்ட அருட்தந்தையா்கள் பங்கேற்று அன்னையின் புகழ்பற்றி மறையுரையாற்றுவா். ஞாயிற்றுக்கிழமை (நவ. 28) மாலை திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை பவனி, ஆலய வளாகத்தில் நடைபெறும்.

டிச. 4 ஆம் தேதி மாலையில் திருவிழா சிறப்புத்திருப்பலி நடைபெறும். அதைத்தொடா்ந்து சகாய அன்னையின் உருவத்தோ் பவனி ஆலய வளாகத்தில் நடைபெறும்.

டிச. 5 ஆம் தேதி காலை திருப்பலி நிறைவுற்று கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது என்று தூய சகாயமாதா ஆலய திருவிழாக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT