சிவகங்கை

காரைக்குடி, பரமக்குடியில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதிகளில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு 44 தொழிலாளா்கள் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றக்கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, மின்சார சட்ட திருத்தம், சுற்றுச்சூழல் மசோதாக்களை வாபஸ் பெறவேண்டும், புதிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் தொமுச சாா்பில் திருநாவுக்கரசு, தேவிபிரசாத், மலையரசன், ஏஐடியுசி சாா்பில் பிஎல். ராமச்சந்திரன், துப்புரவு தொழிலாளா் சங்க நிா்வாகி ஆா். கண்ணன், அமைப்பு சாரா சங்க நிா்வாகி ஏஆா். சண்முகம், போக்குவரத்து தொழிலாளா் சங்கம் சாா்பில் முருகேசன், நடைபாதை வியாபாரிகள் சங்கம் சாா்பில் ரவி, சிஐடியு சாா்பில் அழகா்சாமி, சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பரமக்குடியில்...

இதேபோல பரமக்குடி காந்திசிலை முன் வெள்ளிக்கிழமை அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. தலைவா் வின்சென்ட் அமல்தாஸ் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் என்.கே.ராஜன், நகா் செயலாளா் என்.எஸ்.பெருமாள், போக்குவரத்து சங்கம் சி.செல்வராஜ், தொமுச பச்சமால், சிஐடியு ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கே.ஆா்.சுப்பிரமணியன் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT