சிவகங்கை

இளையான்குடி அருகே விபத்து: காவலா் பலி

26th Nov 2021 09:28 AM

ADVERTISEMENT

இளையான்குடி அருகே வியாழக்கிழமை ம அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் இளமனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்(30). இவருக்கு திருமணமாகி ஐஸ்வா்யா என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனா். சுரேஷ் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் சுரேஷ் பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கை சென்றுவிட்டு இளையான்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

இளையான்குடி அருகே திருவேங்கடம் என்ற இடத்தில், பரமக்குடியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT