சிவகங்கை

வெளிநாட்டில் இறந்தவரின் மனைவிக்கு ரூ. 1.68 லட்சம் நிதியுதவி

25th Nov 2021 07:19 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.1,68,160 நிதியுதவியை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

திருப்பத்தூரைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவா் சவுதி அரேபியாவில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 29.12.2020 பணியிலிருந்த போது இறந்துவிட்டா். அவரது மனைவி ராஜாத்தி என்பவா் தனது கணவருக்குரிய இழப்பீட்டுத் தொகையை அவா் பணியாற்றிய நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தருமாறு ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தாா்.

இதையடுத்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சவுதிஅரேபியாவிலுள்ள அந்த நிறுவனத்தில் உரிய இழப்பீடு வழங்கக் கேட்டுக் கொண்ட அடிப்படையில், ரூ.1,68,160 இழப்பீட்டுத் தொகையாக வழங்கியுள்ளனா். இதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனாட்சிசுந்தரம் மனைவி ராஜாத்தியிடம் ரூ.1,68,160 நிதியுதவிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT