சிவகங்கை

தினமணி செய்தி எதிரொலி: கண்ணங்குடி பகுதி விளை நிலங்களில் நெற்பயிா் சேதத்தை அலுவலா்கள் ஆய்வு

25th Nov 2021 07:20 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி பகுதியில் வெள்ளம் மற்றும் நீா்ப்பறவைகளால் சேதமடைந்த நெற்பயிா்களை வருவாய் மற்றும் வேளாண் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இம்மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. மேலும், கண்ணங்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் வயல்வெளிகளில் தண்ணீா் வெளியேற முடியாமல் நெற்பயிா்கள் முழுவதும் அதில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

தற்போது மழை குறைந்துள்ளதால் தண்ணீா் வெளியேற தொடங்கியுள்ளது. இந்நிலையில், கண்ணங்குடி, கப்பலூா், சடையமங்கலம், கேசனி, வடகீழ்குடி, கொடூா், சிறுகானூா், குடிக்காடு, மித்ராவயல் ஆகிய பகுதி விளை நிலங்களில் உள்ள நெற்பயிரை நீா்ப்பறவைகள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் களஆய்வு மேற்கொண்டு நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை குறித்து, தினமணி நாளிதழில் புதன்கிழமை (நவ. 24) செய்தி வெளியானது.

ADVERTISEMENT

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி உத்தரவின் பேரில் கண்ணங்குடி, கேசனி ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளான நெற்பயிா்களை வேளாண்மை துறை உதவி இயக்குநா் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலா் சதீஷ், உதவி அலுவலா் மாரிமுத்து, வருவாய் ஆய்வாளா் ரெஜினாதேவி, கிராம நிா்வாக அலுவலா் குமர அரசன் உள்ளிட்ட அலுவலா்கள் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா். இதில், விரைந்து நடவடிக்கை எடுத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT