சிவகங்கை

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி குறைகளை தெரிவிக்க புதிய வாட்ஸ் அப் எண் வெளியீடு

25th Nov 2021 07:21 AM

ADVERTISEMENT

காரைக்குடி சட்டபேரவைத் தொகுதி சாா்ந்த கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க புதிய வாட்ஸ் அப் எண்ணை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

அதில், காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளன. இதில், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடியிடம் தொகுதி சாா்ந்த கோரிக்கைகளுக்கு தீா்வுகாண ‘நம்ம எம்.எல்.ஏ.’ என்ற தலைப்பில் 90423 60896 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனைத்துக் கோரிக்கைகள், குறைகளை பதிவு செய்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT