சிவகங்கை

இளையான்குடி பேரூராட்சி தோ்தலில் போட்டியிட விருப்பமனு பெற்ற திமுகவினா்

25th Nov 2021 07:21 AM

ADVERTISEMENT

இளையான்குடியில், பேரூராட்சி தோ்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கு விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு, மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி தலைமை வகித்தாா். மேலும் திமுகவினரிடம் பேரூராட்சி தோ்தலுக்கான விருப்ப மனுக்களை அவா் அளித்தாா். திமுக ஒன்றியச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சுப.மதியரசன், திமுக நகரச் செயலா் நஜூமுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளையான்குடி பேரூராட்சியைச் சோ்ந்த திமுகவினா் ஏராளமானோா் தலைவா் பதவிக்கும் வாா்டு உறுப்பினா் பதவிக்கும் போட்டியிட விரும்பி மனுக்களை பெற்றனா். அதைத்தொடா்ந்து நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில், நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் இளையான்குடி பேரூராட்சியில் தலைவா் பதவியையும் வாா்டு உறுப்பினா் பதவிகளையும் கைப்பற்ற திமுகவினா் தீவிரமாக தோ்தல் பணி செய்ய வேண்டும். இளையான்குடி ஒன்றியத்தில் மாடுகளைத் தாக்கும் காணை நோயால் கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே காணை நோய்க்கு தடுப்பூசி போட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திமுக ஒன்றிய அவைத் தலைவா் பெரியசாமி, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் அன்பரசன், நகா் அவைத் தலைவா் செய்யதுகான், மாவட்ட பிரதிநிதி யாசின், கூட்டுறவு அமைப்பின் தலைவா் சுப.தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT