சிவகங்கை

கண்மாய் நீரில் மூழ்கி மூதாட்டி சாவு

21st Nov 2021 11:10 PM

ADVERTISEMENT

இளையான்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

தாயமங்கலம் நாட்டாா் கண்மாயில் மூதாட்டி சடலம் மிதப்பதாக, இளையான்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்ததில், அவா், பெரியகண்ணனூா் அருகே பகையஞ்சான் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி நாகம்மாள் (60) என்பதும், அவா் தாயமங்கலம் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தபோது, கண்மாயில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT