சிவகங்கை

மகனை கடத்திச் சென்ற தாய் உள்பட 4 போ் கைது

10th Nov 2021 09:48 AM

ADVERTISEMENT

சிவகங்கை அருகே மகனை கடத்திச் சென்ற தாய் உள்பட 4 பேரை சிவகங்கை தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், வீராணி கிராமத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரன்(35). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சோ்ந்த பரமேஸ்வரி(30) என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு புவியரசன் (8) என்ற மகனும், மேகவா்ஷினி (6) என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில், கணவன், மனைவி ஆகிய இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். குழந்தைகள் 2 பேரும் வீராணி கிராமத்தில் தந்தை காளீஸ்வரனுடன் வசித்து வருகின்றனா்.

இதையொட்டி, பரமேஸ்வரி உள்ளிட்ட 4 போ் வீராணியில் உள்ள காளீஸ்வரன் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா். அப்போது வீட்டில் காளீஸ்வரனின் தாயாா் முத்துராக்கு (80) மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனா். அவா்கள் காளீஸ்வரனின் தாயாா் முத்துராக்குவை தாக்கிவிட்டு, புவியரசனை மட்டும் துாக்கிக் கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளனா்.

ADVERTISEMENT

இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் முத்துமீனாட்சி, சாா்பு- ஆய்வாளா் ஸ்ரீதரன் உள்ளிட்ட போலீஸாா் விரைந்து சென்று, பரமேஸ்வரி(30), அவரது உறவினா்களான ராஜா(38), காா் ஓட்டுநா் ராமச்சந்திரன்(37), ரமேஷ்(38) ஆகிய 4 பேரையும் கைது செய்து, புவியரசனை மீட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT