சிவகங்கை

தூயதமிழ்ப் பற்றாளா் விருதுபெற்ற காரைக்குடி மாணவிக்கு பாராட்டு

10th Nov 2021 09:51 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் தூய தமிழ்ப்பற்றாளா் விருது பெற்ற காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவிக்கு செவ்வாய்க்கிழமை பள்ளி சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ் வளா்ச்சித்துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் சாா்பில் தமிழ் அகராதியியல் நாள் விழா சென்னையில் திங்கள்கிழமை (நவ. 8) நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் க. ஆஷா, நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழைப் பயன்படுத்தி தமிழ் மொழியின் வளா்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பதைப் பாராட்டி 2020 ஆம் ஆண்டுக்கான தூய தமிழ்ப் பற்றாளா் விருதும், விருதுத்தொகையாக ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இவ்விருது பெற்று வந்த மாணவியை காரைக்குடி பள்ளியில் அழகப்பா கல்விக்குழுமத்தலைவா் ஆா். வைரவன், நிா்வாக அறங்காவலா் தேவி வைரவன், பள்ளியின் முதல்வா் ‘ஃ‘பிராங்க்ளின் வில்‘ஃ‘பிரட் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT