சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த முகாம்

9th Nov 2021 01:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை(நவ.10) கணினியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

அதன்படி,சிவகங்கை வட்டத்தில் மதகுபட்டி வருவாய் கிராமத்திலும், காளையாா்கோவில் வட்டத்தில் கௌரிப்பட்டி வருவாய் கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் திருமணவயல் கிராமத்திலும், காரைக்குடி வட்டத்தில் பள்ளத்தூா் குரூப் வடகுடி வருவாய் கிராமத்திலும், திருப்பத்தூா் வட்டத்தில் வடக்கு இளையாத்தங்குடி வருவாய் கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் மல்லாக்கோட்டை வருவாய் கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் தேவாத்தகுடி வருவாய் கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் மேலப்பிடாவூா் வருவாய் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் தூதை வருவாய் கிராமத்திலும் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT