சிவகங்கை

அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்ததாக ஊராட்சித் தலைவா் மீது புகாா்

14th May 2021 11:03 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் பெரியகோட்டையில் அரசு அங்கன்வாடி மைய கட்டடத்தை அதிமுக ஊராட்சி மன்றத் தலைவா் இடித்ததாக, காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்யப்பட்டுள்ளது.

பெரியகோட்டை கிராமத்தில் அங்கன்வாடி மையம் சொந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு, 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த மையம் செயல்படவில்லை. இதனால், பொருள்கள் அனைத்தும் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று கொடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள அதிமுகவை சோ்ந்த ராஜாத்தி மற்றும் அவரது கணவா் சேகா் ஆகியோா் இயந்திரங்களுடன் சென்று அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்து தகா்த்துவிட்டனா். மேலும், கட்டடத்தில் இருந்த கம்பிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனராம்.

இது குறித்து பெரியகோட்டை கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்பவா் மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT