சிவகங்கை

காரைக்குடியில் 3 இடங்களில் தற்காலிக காய்கனிக் கடைகள் தொடக்கம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கரோனா பொதுமுடக்கத்தால் ஒரே இடத்தில் இயங்கி வந்த காய்கனிக் கடைகள் தற்காலிகமாக புதன்கிழமை முதல் பேருந்து நிலையங்கள் உள்பட மூன்று இடங்களில் செயல்படத் தொடங்கியுள்ளன.

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அதிகமாக இருப்பதால் தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. இதில் சில தளா்வுகளுடன் பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதற்காக கடைகள் திறப்பதற்கு நேரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காய்கனி கடைகள் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதியளித்துள்ளது.

காரைக்குடியில் திங்கள், வியாழக்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சாலையோரத்தில் காய்கனிக் கடைகளிலும், அண்ணா தினசரி காய்கனிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது. மக்கள் கூட்டத்தை குறைத்து கடைகளை மூன்று பகுதிகளில் செயல்படவும் வியாபாரிகளிடம் காரைக்குடி வட்டாட்சியா் அந்தோணிராஜ், நகராட்சி ஆணையா் லெட்சுமணன், காரைக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.

அதன்படி காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் 47 கடைகளும், அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 45-கடைகளும், காரைக்குடி பழையபேருந்து நிலையத்தில் 25-கடைகளும் அமைத்து செயல்படலாம் என அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அனுமதியளித்தனா். இதையடுத்து புதன்கிழமை முதல் அங்கு கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் காய்கனிகள் வாங்கிச் செல்லுமாறு நகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT