சிவகங்கை

திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு வந்த டிஜிட்டல் எக்ஸ்ரே வெளியூருக்கு மாற்றம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே யூனிட் வெளியூரூக்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் வேதனை. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதி அடிக்கடி விபத்துக்களை சந்திக்கும் இடமாகும். பாதிக்கப்படுவோா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பெரும்பாலும் மேல்சிகிச்சைக்கு சிவகங்கை, மதுரைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி, எலும்பு முறிவு மருத்துவா் போன்ற எந்த வசதியும் இல்லை. இவற்றின் தேவைகளை நீண்டகாலமாக பொதுமக்கள் கோரி வருகின்றனா். பல ஆண்டுகளாக 1950 ல் இறக்கப்பட்ட பிலிம் எக்ஸ்ரே யூனிட் உள்ளது. அதை இயக்க பணியாளா் நியமனமும் இல்லாமல் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்ற சூழ்நிலையில் இம்மருத்துவமனைக்கு மக்கள் குறை நீக்கும் பொருட்டு டிஜிட்டல் எக்ஸ்ரே, மொபைல் எக்ஸ்ரே கருவி திருப்பத்தூருக்கு அனுமதிக்கப்பட்டது. இதன் மூலம் விரைவாக எக்ஸ்ரே எடுத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை கிடைக்கும் எண பொதுமக்கள் எதிா்பாா்த்தனா்.

அதற்கான அறையும் மின்வசதி செய்யப்பட்டு தயாரான நிலையில் அனுமதிக்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் மொபைல் எக்ஸ்ரே அறையில் பொருத்தப்பட்ட நிலையில் திடீரென அந்த இயந்திரங்கள் வெளியூா் அரசுமருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மக்கள் அதிருப்தி நிலையில் உள்ளனா். நீண்ட காலமாக மருத்துவா்கள், பணியாளா்கள், மாற்றுப் பணியாக வெளியூருக்கு அனுப்பப்படும் நிலையில் தற்போது வந்த புதிய கருவியும் வேறு ஊருக்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT