சிவகங்கை

கரோனாவை கட்டுப்படுத்த மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆட்சியா்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அரசின் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வுக்கு தேவைப்படும் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் தேநீா் கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, உணவகங்களில் பாா்சல் சேவைகளுக்கு அனுமதி உள்ளது. பேருந்து போக்குவரத்து, காா், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் வந்து செல்லவேண்டும்.

அவ்வாறு வரும்போது முகக்கவசம் அணிவது மட்டுமின்றி, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், அரசின் முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT