சிவகங்கை

மானாமதுரையில் எஸ். நாகராஜன் (அதிமுக) வேட்புமனு

15th Mar 2021 03:19 PM

ADVERTISEMENT

மானாமதுரை( தனி) சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ் நாகராஜன் திங்கட்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 
மானாமதுரை உடைகுளம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் இருந்து திரளான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த நாகராஜன் தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அங்கிருந்து ஊர்வலமாக வந்த நாகராஜன் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். 
முன்னதாக 100 மீட்டர் முன்னதாகவே உடன் வந்த அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதைத்தடர்ந்து நாகராஜன் மானாமதுரை தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தனலட்சுமியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 
அப்போது அதிமுக இளையான்குடி ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன் 
ஆகியோர்உடன் இருந்தனர். நாகராஜனுக்கு மாற்று வேட்பாளராக. அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் நெட்டூர் பாலமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். உடன் மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ எம்.குணசேகரன் உடனிருந்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT