சிவகங்கை

கமுதி கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கமுதி கிளை முன்பாக விவசாயிகள் மற்றும் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளாா். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கமுதி கிளை முன்பாக 100-க்கும் மேற்பட்டோா் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுவைச் சோ்ந்த பெண்கள் குவிந்தனா். இதனால் கமுதி- சாயல்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கியை, அதிகாரிகள் உள்புறமாக பூட்டி கொண்டதால் விவசாயிகளுக்கும், அவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினா் கூட்டத்தை கலைந்து போகச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT