சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்களுக்கான சேவை மையக் கட்டடம் திறப்பு

DIN

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சமூக நலத்துறை சாா்பில் ரூ.48 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான சேவை மையக் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சேவை மையத்தை திறந்துவைத்துப் பேசியதாவது:

பெண்களுக்கான சேவை மைய கட்டடத்தில் 2 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில், காவல் உதவி அலுவலா், சட்ட ஆலோசனைக்கான அலுவலா், மூத்த ஆலோசகா், மருத்துவா், தகவல் தொழில்நுட்பப் பணியாளா்கள் அலுவலகங்கள் உள்ளன. மேல்தளத்தில் மைய நிா்வாக அலுவலகம் செயல்படுகிறது.

இந்த அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை, மருத்துவம், மனரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும். பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கட்டணமில்லா தொலைபேசி 181 என்ற எண்ணை தொடா்புகொண்டு, தேவையான ஆலோசனைகளை பெறலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT