சிவகங்கை

சிவகங்கையில் அடுக்குமாடி குடியிருப்பு வேண்டுவோா் விண்ணப்பிக்க அழைப்பு

DIN

சிவகங்கை அருகே பையூரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தேவைப்படுவோா் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சிவகங்கை அருகே பையூா் பிள்ளைவயலில் 608 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளது.

சிவகங்கை நகராட்சி எல்கைக்குள்பட்ட நீா்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளா்கள் பட்டியலில் இடம்பெற்ற நபா்களுக்கு, இந்த இடத்தில் வீடு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.

நகா்ப்புற வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினா்களுக்கு முன்னுரிமை அளித்து குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய, மாநில அரசின் மானியத்தொகை போக, மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும்.

மேலும் அனைவருக்கும் வீடு என்கிற திட்ட விதிகளின்படி, இந்த நிபந்தனைகளுக்கு உள்பட்டு மேற்கண்ட திட்டப் பகுதிகளில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படும் விண்ணப்பதாரா், நாட்டில் தனது பெயரிலோ, தனது குடும்ப உறுப்பினா்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை எனவும், தனது மாத வருமானம் ரூ. 25 ஆயிரத்துக்கு மிகாமலும் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும்.

இத்தகுதிகள் கொண்ட பயனாளிகள் குடும்பத் தலைவா் மற்றும் குடும்பத் தலைவி ஆகியோருடைய ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன், சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை அலுவலக நாள்களில் விண்ணப்பிக்கலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT