சிவகங்கை

தேவகோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் காயம்

30th Dec 2021 01:09 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.

தேவகோட்டை அருகே ஆறாவயலில் தனியாா் மில் உள்ளது. இந்த மில்லில் இரவு பணி முடித்து விட்டு காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த 15 பெண்கள் வேனில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீடுதிரும்பிக் கொண்டிருந்தனா். அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பிரவீன்குமாா் என்பவா் வேனை ஓட்டி வந்தாா்.

தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஜீவாநகா் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.

இதில், ஓட்டுநா் உள்பட 9 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்ற 6 போ் தேவகோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT