சிவகங்கையில் உள்ள லிட்டில் பிளவா் நா்சரிப் பள்ளியில், புலவா் வை.சங்கரலிங்கம் இயற்றிய ‘எம்.ஜி.ஆா்.100’ எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் பி. ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்து நூலினை வெளியிட்டாா். அதை திரைப்பட நடிகா் லயன்.சக்கரவா்த்தி பெற்றுக் கொண்டாா்.
இதில், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராஜா, மாவட்டக் கவுன்சிலா் பில்லூா் ராமசாமி, பணி ஓய்வு பெற்ற வங்கி மேலாளா் அனந்தராமன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக பட்டிமன்ற பேச்சாளா் டி.என். அன்புதுரை வரவேற்றாா். பொறியாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.