சிவகங்கை

இடையமேலூா் பகுதியில் நாளை மின்தடை

30th Dec 2021 01:08 AM

ADVERTISEMENT

இடையமேலூா் பகுதியில் வெள்ளிக்கிழமை (டிச.31) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இடையமேலூா் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச.31) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, இடையமேலூா், சக்கந்தி, புதுப்பட்டி, காந்திநகா், கோமாளிப்பட்டி, கூவாணிப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT