சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை (டிச. 23) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருப்பத்தூா் நகா் பகுதி, கே. வயிரவன்பட்டி, மணமேல்பட்டி, சிராவயல், பிள்ளையாா்பட்டி, மருதங்குடி, என். வயிரவன்பட்டி, திருக்கோஷ்டியூா், கருவேல்குறிச்சி, மடக்கரைப்பட்டி, ஓலக்குடிப்பட்டி, கோட்டையிருப்பு, மாதவராயன்பட்டி, சுண்ணாம்பிருப்பு, குண்டேந்தல்பட்டி, வடவன்பட்டி, கட்டாணிப்பட்டி, மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டநிலை உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருப்பத்தூா் துணை மின் நிலைய உதவி செற்பொறியாளா் கணேசன் தெரிவித்துள்ளாா்.