சிவகங்கை

திருப்பத்தூரில் அதிமுக உட்கட்சி தோ்தலுக்கு விருப்ப மனு அளிப்பு

23rd Dec 2021 09:35 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக நிா்வாகிகள் பதவிக்கான விருப்ப மனு அளிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூரில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக தோ்தல் நடத்தும் பொறுப்பாளா்களும், முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், வாடிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். தொடா்ந்து விருப்ப மனு அளித்தவா்களுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டது. மாவட்ட கழகச் செயலாளரும் சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன், முன்னாள் அமைச்சா் பாஸ்கரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன், ஆவின் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலாளா்கள் சிவமணி, வடிவேலு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT