சிவகங்கை

கண்டனூா் கதா் கிராமத் தொழிற்சாலையில் ஆட்சியா் ஆய்வு

16th Dec 2021 12:36 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூா் பேரூராட்சியில் இயங்கிவரும் கதா் கிராமத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருள்களை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி முன்னிலை வகித்தாா். சோப் ஆயில் தயாரிக்கும் பிரிவு, குளியல் சோப் தயாரிக்கும் பகுதி, காலணிகள் தயாரிக்கும் பகுதி, கதா் வாரியத்துறையின் மூலம் நூல் உற்பத்தி செய்யும் பிரிவு, மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் தரைவிரிப்புகள், பனைஓலை நாரில் அழகுசாதனப் பொருள்கள் தயாரித்தல், வண்ண வண்ணக் கூடைகள் தயாரித்து வரும் பகுதிகள் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: இத் தொழிற்சாலையை விரிவுபடுத்தும் வகையில் அலுவலா்கள் பல்வேறு டிரேடா்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். கூடுதலாக 24 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சுழற்சி முறையில் 50 மகளிா்கள் நூற்பாலையில் பணிபுரிந்து வருகின்றனா். இதனை மேலும் விரிவுப்படுத்தி சுற்றுவட்டாரப்பகுதியில் பெண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பை கொடுக்கவேண்டும் என்று கதா்த்துறை மற்றும் மகளிா் திட்டத்துறை அலுவலா்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் 200-க்கும் மேற்பட்டோா் பணிபுரியும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பிரபாகரன், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் வானதி, கதா்கிராமத்தொழில்கள் வாரியத்துறை உதவி இயக்குநா் குமாா், கதா் கிராமத் தொழில்கள் வாரியத்துறைச் செயலாளா் தேவராஜ், கதா் கிராமத்தொழில்கள் வாரியத்துறை தொழில்நுட்ப வல்லுநா் சந்தானமூா்த்தி, காரைக்குடி வட்டாட்சியா் மாணிக்கவாசகம், கண்டனூா் பேரூராட்சி செயல் அலுவலா் பெலிக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT