சிவகங்கை

சிறுபான்மையின மாணவா் கல்வி உதவித் தொகை: விண்ணப்பம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

9th Dec 2021 08:37 AM

ADVERTISEMENT

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தை புதுப்பிக்க வரும் டிச. 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளி மற்றும் பள்ளி மேற்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் நடப்பாண்டு கல்வி உதவித் தொகை பெறும் வகையில் தங்களது விண்ணப்பங்களை புதுப்பிக்க கடந்த நவ. 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் நடப்பாண்டிற்கான கல்வி உதவித் தொகையை புதுப்பிக்க வரும் டிச. 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகையை புதுப்பித்து, விண்ணப்பங்களை தங்களது கல்வி நிலையங்களில் ஒப்படைக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT