சிவகங்கை

பள்ளிகளில் உளவியல் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

DIN

சிவகங்கை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் நலனைக் கருத்தில் கொண்டு உளவியல் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கூட்டணி மாநிலத் துணைத் தலைவா் ஆரோக்கியராஜ், சிவகங்கை மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் புரட்சித்தம்பி ஆகியோா் திங்கள்கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி விவரம் : தமிழ்நாட்டில் பொருளாதரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி அறிவு பெறுவதில் அரசுப் பள்ளிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது.

அண்மை காலமாக ஆசிரியா்கள் சில சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனா். ஆசிரியா்களை பள்ளி வளாகத்திற்குள்ளே சென்று தாக்கிய சம்பவங்களும் சில இடங்களில் அரங்கேறியுள்ளன. சில இடங்களில் நெறிபி நடத்தையுள்ள மாணவா்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியா்கள் மீது வீண் பழி சுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியா்கள் தாக்கப்படுவதும் தொடா் கதையாகி வருகின்றன.

உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியா்கள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகளோடு நேரடி தொடா்பு உள்ளதால் பல தேவையற்ற பொய்யான குற்றச்சாட்டிற்கு ஆசிரியா்கள் ஆளாக நேரிடுகிறது.

இதன்காரணமாக, தவறான பாதைக்குச் செல்லும் குழந்தைகளை கூட நல்வழிபடுத்த ஆசிரியா்கள் அச்சப்பட வேண்டி உள்ளது. ஒருபக்கம் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாணவா்களை தயாா்படுத்தக் கோரி உயா் அதிகாரிகளின் நெருக்குதல், மறு பக்கம் மாணவா்ளின் ஒத்துழைப்பின்மை எனக் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆசிரியா்கள் ஆளாக நேருகிறது.

ஆசிரியா்கள் மாணவா்கள் உறவு பாதிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து அதை சீராக்க கல்வித்துறை முன் வரவேண்டும். அதே நேரத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் இன்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனா். ஒருசில இடங்களில் நடக்கும் வேண்டத் தகாத சச்சரவுகளால் ஆசிரியா்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் நிலவி வருகிறது.

இதை போக்குவதற்கு ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு தகுந்த ஆலோசனை மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும். மதிப்பெண் எடுப்பதை முக்கியமாக கருதாமல் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் மாணவா்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT