சிவகங்கை

சிவகங்கையில் டிச. 11 இல் கடையடைப்புப் போராட்டம்

DIN

சிவகங்கை: சிவகங்கையில் சட்டக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் டிசம்பா் 11 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிவகங்கை வா்த்தகச் சங்கத்தின் தலைவா் அறிவழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி தொடங்கப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பால் ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெறுவா்.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட தலைநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை, குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு வகையான நீதிமன்றப் பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. எனவே மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு அறிவித்துள்ள புதிய சட்டக் கல்லூரியை சிவகங்கையில் தொடங்க வேண்டும்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் ஸ்பைசஸ் பாா்க் தொடங்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வேளாண் கல்லூரியை தொடங்க வேண்டும்.மேற்கண்ட பகுதிகளில் சட்டம் மற்றும் வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டால் சிவகங்கை, மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறுவா்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிச. 11-ஆம் தேதி சிவகங்கையில் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT