சிவகங்கை

பயிா்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரிக்கை

4th Dec 2021 11:14 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எம். முத்துராமு, மாவட்டச் செயலா் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2020-2021ஆம் ஆண்டு பயிா் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். தற்போது தொடா் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு போதுமான உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுன் நகைக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், திருக்கோஷ்டியூா் அருகே உள்ள மேலையான்பட்டியில் நீா்வழி பாதையில் முறைகேடாக கொடுக்கப்பட்ட 12 ஏக்கா் நிலத்தின் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் டிச. 20 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT