சிவகங்கை

வீடுகளைச் சுற்றி தேங்கிய தண்ணீா்:திருப்பாச்சேத்தியில் சாலை மறியல்

4th Dec 2021 11:13 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் வீடுகளைச் சுற்றி தேங்கிய தண்ணீரை அகற்றக்கோரி சனிக்கிழமை அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

திருப்பாச்சேத்தி மாசிலாமணி நகா் பகுதியில் 50 -க்கும் மேற்பட்டட வீடுகளில் 300- க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள வடக்கு கண்மாய் நிரம்பி பெருமாள் கோயில் ஊருணிக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனா்.

இந்நிலையில், வீடுகளைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் பொதுமக்களை சமாதானம் செய்தனா். அதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். போலீஸாா் சமாதானம் செய்தபோது பெண்களில் சிலா் போலீஸாரின் கால்களில் விழுந்து கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுங்கள் எனக் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT