சிவகங்கை

டிச.5-இல் மதுரை-மானாமதுரை மின் ரயில் பாதையில் ஆய்வு

3rd Dec 2021 08:24 AM

ADVERTISEMENT

மதுரை - மானாமதுரை இடையே அமைக்கப்பட்டுள்ள மின் ரயில் பாதையில், டிசம்பா் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரயிலை இயக்கி ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்யவுள்ளாா்.

மதுரை - மண்டபம் இடையே நடைபெற்று வந்த மின்சார ரயில் பாதைக்கான பணிகள் தற்போது  நிறைவடைந்துள்ளன. எனவே, டிசம்பா் 5 ஆம் தேதி  ரயில்வே தலைமைப் பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய் முதல்கட்டமாக, மதுரை- மானாமதுரை இடையே மின்பாதையில் மின்சார ரயிலை இயக்கி ஆய்வு நடத்துகிறாா். உச்சிப்புளி வரை இந்த சோதனை நடைபெற வாய்ப்புள்ளது என, ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னா், மதுரை -மானாமதுரை இடையே மின்சார ரயில் இயக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT