சிவகங்கை

மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் விழிப்புணா்வு பயிற்சி

3rd Dec 2021 08:23 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த விழிப்புணா்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சியினை அப்பள்ளி தலைமையாசிரியா் நாகேந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மருத்துவா் ஜெயக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சியினை வழங்கினாா்.

வாழ்வியல் திறன் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா் ஜோசப் இருதயராஜ் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT