சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று பட்டா திருத்த முகாம்

3rd Dec 2021 08:23 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 3) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

அதன்படி, சிவகங்கை வட்டம் தமறாக்கி தெற்கு, காளையாா்கோவில் வட்டம் சாக்கூா், தேவகோட்டை வட்டம் இருவினிவயல், காரைக்குடி வட்டம் ஆம்பக்குடி, திருப்பத்தூா் வட்டம் கண்டவராயன்பட்டி, சிங்கம்புணரி வட்டம் கிருங்காக்கோட்டை, இளையான்குடி வட்டம் உதயனூா், மானாமதுரை வட்டம் வெள்ளிக்குறிச்சி, திருப்புவனம் வட்டம் பாப்பாகுடி ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள் அந்தந்த வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT