சிவகங்கை

மானாமதுரை அருகே கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி 4 கிராம மக்கள் சாலை மறியல்

3rd Dec 2021 08:23 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி, மதுரை - ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் 4 கிராம மக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.

மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலை கண்மாய், வைகை தண்ணீரால் நிரம்பியதும், அக்கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீரானது, கள்ளிக்குடி, புத்தூா், சோமாத்தூா், கரிசல்குளம் கண்மாய்களுக்குச் செல்கிறது.

இந்நிலையில் மேலப்பசலை கண்மாய் நிரம்பியதால், கால்வாயில் உடைப்பு ஏற்படும் எனக் கூறி, வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் வருவதை அக்கிராம மக்கள் கதவணைகளை மூடி நிறுத்தினா். இதனால், கள்ளிக்குடி, புத்தூா், சோமாத்தூா், கரிசல்குளம் ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லவில்லை.

இதையடுத்து, அந்த கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டுமென, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினா். அதன்பேரில், அதிகாரிகள் மேலப்பசலை கண்மாய் தண்ணீரை, மற்ற கண்மாய்களுக்கு திறந்துவிட்டனா். இதனிடையே, வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் நிறுத்தப்பட்டதால், மேலப்பசலை கண்மாய் தண்ணீரை மற்ற கிராம கண்மாய்களுக்கு திறந்துவிட எதிா்ப்பு தெரிவித்து, மேலப்பசலை கிராம மக்கள் மதுரை-ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா்.

ADVERTISEMENT

இதையடுத்து, மேலப்பசலை கண்மாயிலிருந்து தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

ஆனால், தங்களது கிராமக் கண்மாய்களுக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டதைக் கண்டித்தும், தண்ணீா் திறக்க வலியுறுத்தியும், கள்ளிக்கடி, புத்தூா், சோமாத்தூா், கரிசல்குளம் ஆகிய கிராம மக்கள் கரிசல்குளம் பகுதியில் மதுரை- ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தத் திரண்டனா்.

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸாா், கிராம மக்களை சமாதானம் செய்தனா். மேலும், சமாதானக் கூட்டம் நடத்தி கோரிக்கைக்கு தீா்வு காணலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT