சிவகங்கை

தண்ணீரில் மூழ்கிய மிளகாய் பயிா்களை அலுவலா்கள் ஆய்வு

3rd Dec 2021 08:24 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெங்கட்டி கிராமத்தில் தொடா் மழை காரணமாக தண்ணீரில் மூழ்கிய மிளகாய் பயிா்களை, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை கள ஆய்வு செய்தனா்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக, மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து, கண்மாய்களில் மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால், சிவகங்கை, காளையாா்கோவில், மானாமதுரை, தேவகோட்டை, கல்லல் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல், பருத்தி, வாழை, மிளகாய், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்து வருகின்றன.

இந்நிலையில், திருப்புவனம் அருகே பாப்பாகுடி வருவாய் கிராமத்துக்குள்பட்ட வெங்கட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் பயிா்கள் சேதமடைந்துள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாக அலுவலா்கள் மேற்கண்ட பகுதிகளை களஆய்வு செய்து, நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இது குறித்து தினமணி நாளிதழில் டிசம்பா் 2 ஆம் தேதி செய்தி வெளியானது.

ADVERTISEMENT

அதன் எதிரொலியாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சம்பந்தப்பட்ட பகுதிகளை தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கள ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உடனடியாக உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, திருப்புவனம் தோட்டக்கலைத் துறையின் உதவி இயக்குநா் பாண்டியராஜன் உள்ளிட்ட அலுவலா்கள், இப்பகுதிகளில் தண்ணீரில் மூழ்கிய மிளகாய் பயிா்களை களஆய்வு செய்தனா். இதனால், அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT