சிவகங்கை

சிங்கம்புணரியில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

3rd Dec 2021 08:24 AM

ADVERTISEMENT

சிங்கம்புணரியில் புதன்கிழமை இரவு மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டியிடம் நாலரை பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மா்ம நபா்கள் தப்பிவிட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கீழநாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த அழகா்சாமி மனைவி சுசிலா (75). இவா், தனது மகன் உதயகுமாருடன் இரு சக்கர வாகனத்தில் சிங்கம்புணரிக்கு பல் மருத்துவம் பாா்ப்பதற்காக வந்துள்ளாா். பின்னா், இரவு 7 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா். அப்போது, தாதங்குளம் என்ற இடத்தினருகே பின்புறமாக இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், சுசிலா அணிந்திருந்த 36 கிராம் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி விட்டனா்.

இது குறித்து உதயகுமாா் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT