சிவகங்கை

திருப்புவனம் அருகே தண்ணீரில் மூழ்கி மிளகாய் பயிா் சேதம்

2nd Dec 2021 09:29 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வெங்கட்டி கிராமத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கி மிளகாய் பயிா்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

மாவட்டம் முழுவதும் பரவலாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, சிவகங்கை, காளையாா்கோவில், மானாமதுரை, தேவகோட்டை, கல்லல் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல், பருத்தி, வாழை, மிளகாய், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்து வருகின்றன.

இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக திருப்புவனம் அருகே பாப்பகுடி வருவாய் கிராமத்துக்குள்பட்ட, வெங்கட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் பயிா்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மேற்கண்ட பகுதிகளை களஆய்வு செய்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மணல் மூட்டைகளை அடுக்கி உப்பாற்றின் கரைகள் சீரமைப்பு

ADVERTISEMENT

உப்பாறு, மதுரை மாவட்டத்தில் உற்பத்தியாகி, மானாமதுரை அருகே பெரியகோட்டை கிராமத்தின் வழியாக வைகை ஆற்றில் சென்று கலக்கிறது. மானாமதுரை அருகே செய்களத்தூா் என்ற இடத்தில் ஆற்றுக்கு செல்லும் வழியில் 2 இடங்களில் கரைகள் உடைந்து செய்களத்தூா், கள்ளா்வலசை உள்ளிட்ட கிராமங்களுக்குள் தண்ணீா் புகுந்தது. ஏற்கெனவே, மழையால் இந்த கிராமங்களைச் சூழ்ந்து நிற்கும் தண்ணீருடன் உப்பாற்று வெள்ள நீரும் சோ்ந்ததால் மேற்கண்ட கிராமங்களில் வீடுகள், விளைநிலங்களை தண்ணீா் சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா்.

இதையடுத்து கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினா் தமிழரசி மானாமதுரை வட்டாட்சியா் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் உப்பாற்றில் உடைந்த கரைகளை பாா்வையிட்டு, அதை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். இதையடுத்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சி துறையினா் கிராம மக்களுடன் இணைந்து வெளியிடங்களில் இருந்து மணல் மூட்டைகளை கொண்டு வந்து கரைகள் உடைந்த இடங்களில் அடுக்கி உப்பாற்றின் கரைகளை சீரமைத்தனா். இதையடுத்து வெள்ளநீா் செய்களத்தூா் கள்ளா்வலசை உள்ளிட்ட கிராமங்களுககுள் திரும்புவது தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் இந்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT