சிவகங்கை

மானாமதுரையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

2nd Dec 2021 09:30 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காட்டு நாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வசிக்கும் பா்மா காலனி பகுதியில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது.

மானாமதுரை பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக இப்பகுதியில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. மேலும் அருகேயுள்ள ஆதனூா் கண்மாய் நிரம்பி தண்ணீா் வெளியேறி வருவதால் இப்பகுதியில் தேங்கும் தண்ணீரின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தற்போது ஒருசிலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்துள்ளது.

இதனால் அங்கு வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் இரவு நேரங்களில் அருகிலுள்ள அரசு பள்ளியிலும், பகல் நேரத்தில் தங்களது குடியிருப்புக்கு அருகே உள்ள மேடான பகுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

முன்னாள் பேரூராட்சி கவுன்சிலா்கள் செல்வம், கணேசன் ஏற்பாட்டில் உணவு சமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள காட்டு நாயக்கா் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT