சிவகங்கை

காளையாா்கோவில் பகுதியில் இன்று மின்தடை

2nd Dec 2021 09:29 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியில் வியாழக்கிழமை (டிச.2) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின் பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காளையாா்கோவில் துணை மின் நிலையத்தில் நாட்டரசன்கோட்டை செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதனால், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, முத்தூா், மேப்பல், பையூா், சாக்கூா், உடைகுளம் ஆகிய கிராமங்களிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைக்குடியில் சனிக்கிழமை மின்தடை:

ADVERTISEMENT

காரைக்குடி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (டிச. 4) மாதாந்திரப்பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக்குடியிருப்புகள், செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச்சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்துநிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT