சிவகங்கை

திருப்பத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. தாலுகா மாநாடு

2nd Dec 2021 09:30 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா மாநாடு நடைபெற்றது.

மாநில குழு உறுப்பினா் சாமுவேல்ராஜ் மாநாட்டைத் தொடக்கி வைத்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மோகன், கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பி.எல்.மாணிக்கம் சிறப்புரையாற்றினாா். இதில் 10 போ் கொண்ட தாலுகா குழு தோ்வு செய்யப்பட்டது. இக்குழுவின் செயலாளராக ஆறுமுகம் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருப்பத்தூா் நகரில் செயல்படாமல் இருக்கும் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த வேண்டும். காவிரி- குண்டாறு- வைகை இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். கோவிலூா் கெமிக்கல் ஆலையை மூடவேண்டும். திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா் மற்றும் செவிலியா்களை நியமிக்க வேண்டும். விவசாயிகளுக்குப் பயிா்காப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தோழா் கமலாம்பாள் நினைவு செங்கொடி ஏற்றப்பட்டது. இம்மாநாட்டில் மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT