சிவகங்கை

இளையான்குடி கல்லூரியில் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ராணுவத் தேர்வு பயிற்சி முகாம் 

2nd Aug 2021 12:44 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச ராணுவ தேர்வுக்கான உடற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கிய இந்த இலவச பயிற்சி முகாமில் இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 30 மாணவர்கள் பங்கேற்று இந்திய ராணுவத்தில் வீரர்களாக சேர்வதற்கான தேர்வுக்கு உடல் தகுதிக்காண பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை 15 நாட்கள் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த மாணவர்களுக்கு இளையான்குடி கல்லூரி அலுவலர் காஜா நஜிமுதீன், முனைவென்றி அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராமு ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : Sivagangai
ADVERTISEMENT
ADVERTISEMENT