சிவகங்கை

மானாமதுரையில் மழையால் மண்பாண்டத் தொழில் பாதிப்பு

DIN

மானாமதுரையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக மண்பாண்டத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் வருவாய் இழந்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மண்பாண்டத் தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இத் தொழிலில் ஏராளமான தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பதற்காக மானாமதுரை குலாலா் தெரு பகுதியில் உள்ள மண்பாண்ட தொழில்கூடத்தில், கண்மாய்களிலிருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மண்பாண்டங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா்கள் கூறியது: தொடா் மழையால் மண்பாண்டப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. ஏற்கெனவே உற்பத்தி செய்துள்ள பொருள்களை உலர வைக்க முடியவில்லை. கடந்த 6 மாதங்களாக கரோனா தொற்று பிரச்னையால் தொழில் முடங்கியிருந்தது. தற்போது மழை காரணமாக மண்பாண்டத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளா்கள் வருமானமின்றி தவிக்கின்றனா். அதனால் அரசு மழைக்காலங்களில் வழங்கும் நிவாரண நிதியை இந்தாண்டு உயா்த்தி வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

உலக நடுக்குவாத விழிப்புணா்வு நாள் நிகழ்வு

1,751 மதுபாட்டில்கள் பறிமுதல்: 24 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்: ஏப்.25-இல் தேரோட்டம்; உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

SCROLL FOR NEXT